‛‛டிகிரி போதும் + அனுபவம் வேண்டாம்’’.. இன்போசிஸ் நிறுவனத்தில் சென்னையில் பணி.. - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, July 18, 2024

‛‛டிகிரி போதும் + அனுபவம் வேண்டாம்’’.. இன்போசிஸ் நிறுவனத்தில் சென்னையில் பணி..

‛‛டிகிரி போதும் + அனுபவம் வேண்டாம்’’.. இன்போசிஸ் நிறுவனத்தில் சென்னையில் பணி..


சென்னை இன்போசிஸில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்கள் கூட விண்ணப்பம் செய்து கைநிறைய சம்பளம் பெறலாம். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இன்போசிஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த இன்போசிஸ் நிறுவனத்தின் பிபிஎம் (Infosys BPM Limited) நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் சென்னையில் உள்ள இன்போசிஸ் பிபிஎம் நிறுவனத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி சென்னை இன்போசிஸ் பிபிஎம் லிமிடெட்டில் ‛ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ்’ (Process Executive) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் 2018 முதல் 2024ம் ஆண்டுக்குள் டிகிரி முடித்திருக்க வேண்டும். எம்சிஏ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம். டிகிரி முடித்தவர்கள் கம்ப்யூட்டர் பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும். 

மேலும் 24 X 7 என்ற வகையில் சுழற்சி முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி நைட் ஷிப்ட் பணியையும் மேற்கொள்ள ஆர்வமாக இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.சென்னையிலேயே பணி இந்த பணிக்கு 0 முதல் 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிகிரி முடித்து பணி அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பம் செய்யலாம். 

ஒருவேளை பணி அனுபவம் இருக்கும் பட்சத்தில் அது விண்ணப்பதாரர்களுக்கு பிளஸ் பாயிண்ட்டாக அமையும். இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள இன்போசிஸ் பிபிஎம் லிமிடெட்டில் பிபிஓ சர்வீஸ் லைனில் ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ்வாக பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கான மாதசம்பளம் என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. 

பணிக்கு தேர்வாகும் பட்சத்தில் சம்பளம் குறித்த விபரம் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.அதேபோல் தற்போதைய பணிக்கான அறிவிப்பில் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் விண்ணப்பம் காலாவதியாகலாம். இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக இன்போசிஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்து கொள்வது நல்லது.


பணி குறித்த அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

No comments:

Post a Comment