மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, July 17, 2024

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு தகவல்

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு தகவல் 


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு சட்டப்படியான ஆணையமாக தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆணையத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந் தேதி முதல் தலைவர் பதவி காலியிடம் ஏற்பட உள்ளது. இந்த பதவியினை நிரப்புவதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் தலைமையில் அரசு தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட தேர்வுக் குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு உள்ளது. 

கடந்த 15-ந் தேதி நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவியினை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் வருகிற 31-ந் தேதி மாலை 6.00 மணி வரை வரவேற்கப்படுகிறது. 
மேலும் இது குறித்த விவரங்கள் இணையதள முகவரி https://www.tn.gov.in/department/7 -யில் வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment