சுவரொட்டி வறுவல் செய்வது எப்படி.?
இன்று நம் பதிவில் ஆட்டினுடைய சுவரொட்டி (மண்ணீரல்) சுவையாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். ஆட்டின் ஈரல் போலவே ஆட்டின் சுவரொட்டில் அதிக புரதச்சத்துக்கள் உள்ளது. இந்த மண்ணீரல் சாப்பிடுவதால் உடலில் இரத்த அணுக்கள் அதிகரிக்கும். இது பொதுவாக குழந்தை பெற்றவர்களுக்கும், வயதிற்கு வந்த பெண்களுக்கும் அதிகம் கொடுப்பார்கள். இரத்தசோகை உள்ளவர்களுக்கு இந்த மண்ணீரல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதை சுவையாக எப்படி செய்வது என்று நம் பதிவில் பார்க்கலாம் வாங்க.
சுவரொட்டி (மண்ணீரல்) செய்வதற்கு தேவையான பொருள்கள்:
சுவரொட்டி- 3
சின்ன வெங்காயம் -10
எண்ணெய்- 4 ஸ்புன்
கருவேப்பிலை – 1கொத்து
சீரகம் -1/2 ஸ்புன்
உப்பு- தேவையான அளவு
மஞ்சத்தூள் -1 ஸ்புன்
சீரகத்தூள் -1/2 ஸ்புன்
மிளகுத்தூள்- 1 ஸ்புன்
சுவரொட்டி சுத்தம் செய்யும் முறை:
ஒரு கடாயில் 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். அதன் பிறகு சுவரொட்டியை தண்ணீரில் கழுவி விட்டு, கொதிக்கிற தண்ணீரில் அந்த சுவரொட்டியை போடவும். 10 நிமிடம் கழித்து அந்த சுவரொட்டில் மேல் இருக்கும் வெள்ளை தோள்களை நீக்கவும். அதன் பிறகு அதை சிறு துண்டாக கட் செய்யவும். இப்படி சுடுதண்ணீரில் போடுவதன் மூலம் சுவரொட்டில் உள்ள இரத்தம் சுவரொட்டியை கட் செய்யும் பொழுது வராது.
சுவரொட்டி வறுவல் செய்முறை:
செய்முறை: 1
முதலில் அடுப்பை பத்த வைக்க வேண்டும். அடுப்பில் மிதமான சூட்டில் கடாயை வைக்க வேண்டும். அதன் பிறகு அதில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சீரகம் சேர்க்கவும். சீரகம் சிவந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
செய்முறை: 2
வெங்காயம் வதங்கிய பிறகு அதில் கருவேப்பிலை மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு வெட்டி வைத்த சுவரொட்டியை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
செய்முறை: 3
சுவரொட்டி நன்றாக வதங்கிய பிறகு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். சுவரொட்டி வேகுவதற்கு தண்ணீர் தேவையில்லை. மூன்று நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
செய்முறை: 4
மூன்று நிமிடம் கழித்து மூடியை திறக்கவும். அதில் சீரகத்தூள் மற்றும் காரத்திற்கு தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்துக் வதக்கி விடவும். இப்பொழுது சுவரொட்டி தயார்.
No comments:
Post a Comment