இந்திய அரசு
அமைச்சகம்
உயர் கல்வி துறை
இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தர் பதவிக்கு தேர்வு.
(IGNOU)
இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் (IGNOU) 1985
ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தால் தேசிய அளவில் திறந்தவெளி
பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூரக் கல்வி முறைகளை நாட்டின் கல்வி
முறையில் அறிமுகப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் நிறுவப்பட்டது.
கல்வி மற்றும் நிர்வாக தலைமை பொறுப்பில் உள்ள துணைவேந்தராக இருப்பவர்
கீழ்க்கண்டவராக இருக்க எதிர்பார்க்கப்படுகிறது:
நிரூபிக்கப்பட்ட தலைமைத்துவ குணங்கள், நிர்வாக திறன்கள் மற்றும்
கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நற்சான்றிதழ்கள் கொண்ட ஒரு தொலைநோக்கு
பார்வை கொண்டவர்.
ஒரு பல்கலைக்கழக அமைப்பில் பேராசிரியராக அல்லது ஒரு புகழ்பெற்ற
ஆராய்ச்சி மற்றும்/அல்லது கல்வி நிர்வாக நிறுவனத்தில் (முன்னுரிமை உயர்கல்வி
முறையின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கற்றலில்) 10 வருட அனுபவம்
அல்லது அதற்கு இணையான பதவியில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக
அனுபவத்துடன் சிறப்புமிக்க கல்வியாளராக இருத்தல் வேண்டும்.
சம்பளம் மற்றும் சர்வீஸ் நிபந்தனைகள்:
பதவியில் ஒரு மாதத்திற்கு ரூ.2,10,000/- (நிலையான) ஊதியம் ஸ்பெஷல்
அலவன்சு ரூ.11,250/- மற்றும் இதர வழக்கமான அலவன்சு அவ்வப்போது
பல்கலைக்கழக ஊழியர்களுக்கு அனுமதிப்பதுபோல்.
சர்விஸின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனை ஆனது பல்கலைக்கழகத்தின்
சட்டம், விதி மற்றும் ஒழுங்குமுறையில் குறிப்பிட்டவாறு இருக்கும்.
நியமனத்தின் நடைமுறை:
.
தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்படும் பெயர்களைக் கொண்ட குழுவிலிருந்து
நியமனம் செய்யப்படும். 65 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு
(விளம்பரத்திற்கு எதிரான விண்ணப்பத்தைப் பெறுவதற்கான இறுதித்
தேதியில்) முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த விளம்பரத்தை http://www.education.gov.in மற்றும் www.ignou.ac.in|
என்ற இணையதளங்களிலும் பார்க்கலாம்.
இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் (IGNOU)
துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைப்பின்படி கல்வி அமைச்சகத்தின் SAMARTH போர்டல் மூலம்
மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
http://vcrec.samarth.ac.in
மேலே உள்ள இணைப்பு இந்த விளம்பரம் வெளியான நாளிலிருந்து 30
நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.
ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதற்கு இந்தத் துறை பொறுப்பல்ல.
No comments:
Post a Comment