மதுரை மாவட்டத்தில் உள்ள 9,120 மகளிர் சுய உதவிக்
குழுக்கள், 420 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், 420
ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்புகள், 13 வட்டார
அளவிலான கூட்டமைப்புகளின் கணக்குகளைத் தணிக்கை
செய்ய பட்டயக் கணக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட இயக்க
மேலாண்மை அலகின் திட்ட இயக்குநர் அலுவலகத்தில்
நேரடியாகப்பெறலாம் அல்லது சுய முகவரியிட்ட உறையுடன்
கூடிய விண்ணப்பக் கடிதத்தை அனுப்பிப் பெறலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திட்ட இயக்குநர்
இணை இயக்குநர். மாவட்ட இயக்க மேலாண்மை அலகு.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர்
திட்டம்). ரிசர்வ்லைன், புதுநத்தம் சாலை, மதுரை- 625014
என்ற முகவரிக்கு வருகிற 30-ஆம் தேதி பிற்பகல் 3
மணிக்குள் கிடைக்குமாறு நேரில் அல்லது தபால் மூலம்
சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 94440 94302
என்ற
கைப்பேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment