‘கிளாட்' சட்ட நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 19, 2024

‘கிளாட்' சட்ட நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 24 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை, முதுநிலை சட்டப்படிப்புகளில் சேருவதற்கு ‘கிளாட்' எனும் பொது சட்ட நுழைவுத்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். மேலும், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களும் கிளாட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 

இத்த நிலையில் 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கிளாட் நுழைவுத்தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க அக்டோபர் 15-ந்தேதிக்குள் /consortiumofnlus.ac.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment