அரசு பள்ளியின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்கும், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, அனைத்து அரசு பள்ளிகளிலும் ‘பள்ளி மேலாண்மை குழு' அமைக்கப்பட்டது. இந்த குழுவில், மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என 20 பேர் இருப்பர். கடந்த 2022-ம் ஆண்டு அரசு பள்ளிகளுக்கான மேலாண்மை குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்களின் பதவிக்காலம் இந்த மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில் 2024-26-ம் கல்வியாண்டுக்கான அரசு பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. அதன்படி தொடக்கப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் ஆகஸ்டு மாதம் 10 மற்றும் 17-ந்தேதிகளிலும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஆகஸ்டு 24-ந்தேதியும், நடுநிலை பள்ளிகள் ஆகஸ்டு 31-ந்தேதியும் மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளன.
இதுதொடர்பாக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆகஸ்டு 2-ந்தேதி விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த அனைத்து அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்ககம் உத்தரவிட்டு உள்ளது. இந்த விழிப்புணர்வு கூட்டம் தொடர்பாக, ‘வாட்ஸ்அப்’, துண்டு பிரசுரங்கள் மற்றும் மாணவர்களின் மூலம் பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கவும் அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment