பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 08-08-2024
திருக்குறள்:
பால் : பொருட்பால்
அதிகாரம் : பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்:447
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?
பொருள்: கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் யார் இருக்கின்றனர்?
பழமொழி :
அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்
Sadness and gladness succeed each other
இரண்டொழுக்க பண்புகள் :
*ஆபத்தில் இருப்பவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.
*துன்பப்படுபவர்களைக் கண்டால் அவர்களுக்கு ஆறுதல் கூறுவேன்.
பொன்மொழி :
சிந்தனை தான் உன்னைத் தூண்டி வேலை செய்ய வைக்கின்ற உந்து சக்தி.எனவே, உன் மனதை மிக உயர்ந்த சிந்தனைகளால் நிரப்பி விடு. ----விவேகானந்தர்
பொது அறிவு :
1.சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம் எது?
விடை: மெலனின்
2.தபால் தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு எது?
விடை: மலேசியா
English words & meanings :
*Apprentice* : தொழில் பயிற்சி பெறுபவர் /
வேலைப் பயிற்சி பெறுபவர்
*Artwork* : கலைப் படைப்பு / கலை வேலைப்பாடு
வேளாண்மையும் வாழ்வும் :
கடுமையான கோடைக்காலங்களைச் சந்தித்த மண், இறுகி கடினமாக மாறியிருக்கும். ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளக தொடங்கும்.
நீதிக்கதை பொறாமை வேண்டாம்
ஒரு கிராமத்தில் பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டில் ஒரு நாயையும், பொதி சுமக்க ஒரு கழுதையை வளர்த்து வந்தார். கழுதையை வேலைக்காரன் ஒருவன் கவனித்து வந்தான்.
பண்ணையாருக்கு அவர் வளர்க்கும் நாய் மேல் அதிக அன்பு இருந்தது. ஏனென்றால், அது இரண்டு முறை திருடர்களைப் பிடித்து அவரிடம் ஒப்படைத்துள்ளது. அவர் வெளியே சென்று வீட்டிற்கு வந்தால் தன் வாலை ஆட்டிக்கொண்டே நன்றியை காட்டும்.
அவர் அமர்ந்திருக்கும் போது உரிமையாக சென்று அவர் மடியில் படுத்துக்கொள்ளும். அவர் முகத்தை ஆசையாக நக்கும். பண்ணையார் அதற்கு இறைச்சி துண்டுகளையும் உயர்ந்த ரக உணவுகளையும் கொடுத்து மிகவும் அன்பாக வைத்திருந்தார்.
பண்ணையார் வீட்டில் வளரும் கழுதை பண்ணையார் நாய்க்கு மட்டும் இவ்வளவு சலுகைகளை வழங்குகிறாரே என்று பொறாமைப்பட்டது. பண்ணையார் நாய்க்கு கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் தான் பெற வேண்டும் என்று நினைத்தது.
நாய் போல் தானும் ஒரு நாள் பண்ணையார் மடியில் படுத்து அவர் முகத்தை நக்க வேண்டும் என திட்டம் தீட்டியது. கழுதையின் எண்ணத்தை நாய் புரிந்து கொண்டது. அது கழுதையை பார்த்து, “நண்பா, எனக்கு கிடைக்கும் சலுகைகளை கண்டு நீ பொறாமை படாதே, நான் செய்வதைப் போன்றே நீ செய்தால் பண்ணையார் பொறுத்துக் கொள்ள மாட்டார். உன்னை நன்றாக அடித்து வீட்டை விட்டு துரத்தி விடுவார்” என்று அறிவுரை கூறியது.
கழுதை நாய் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அது நாயை பார்த்து, “நண்பா நடப்பதை நீயே பார். பண்ணையார் என் செயலால் எப்படி மகிழ்ச்சி அடையப்போகிறார் என்பதை பார்” என்று கூறியது.
அதற்கு பிறகு நாய் எதுவும் பேசவில்லை. அன்றைக்கு பண்ணையார் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு வீட்டில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தார். உடனே கழுதை விரைவாக ஓடி சென்று அவருடைய மடியில் அமர்ந்து கொண்டது.
தன்னுடைய நாக்கால் அவருடைய முகத்தை நக்கியது. பின்னர் பெரும் குரல் எடுத்து கத்தியது. பண்ணையாருக்கு கடும் கோபம் வந்தது. அருகில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து அந்த கழுதையை நன்கு அடித்து விட்டார். வலி தாங்க முடியாத கழுதை கத்திக்கொண்டே காட்டுக்குள் ஓடியது.
நீதி : பிறருக்கு கிடைக்கும் சலுகைகளை பார்த்து நாம் பொறாமை படக்கூடாது. அவ்வாறு பொறாமை பட்டால் அது நமக்கு அழிவு தான் உண்டாக்கும்.
இன்றைய செய்திகள் 08.08.2024
🎖️சென்னை மாதவரத்தில் 150 ஏக்கரில் தொழில்நுட்ப நகரம்: மாஸ்டர் பிளானுக்கு ஒப்பந்தம் கோரியது டிட்கோ.
🎖️கூடலூர் கோக்கால் அருகே நிலம், வீடுகளில் விரிசல்: மத்திய புவியியல் துறையினர் ஆய்வு.
🎖️தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
🎖️இஸ்ரோ வடிவமைத்துள்ள புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோள், எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.
🎖️பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தம்; வினேஷ் போகத் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் எடை அதிகரித்ததால் தகுதி நீக்கம்.
🎖️இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.
🎖️இந்தியா-இலங்கை ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
Today's Headlines
🎖️150 Acre Technology City in Chennai Madhavaram: DITCO requested Contract for Master Plan
🎖️ Cracks in land, houses near Kokal, Kudalur: Central Geological Department is taking survey.
🎖️ Heavy rain likely in 9 districts of Tamil Nadu today: Chennai Meteorological Center Information.
🎖️EOS-08, a state-of-the-art earth observation satellite designed by ISRO, will be launched on August 15 by SSLV T-3 rocket.
🎖️Paris Olympic Wrestling; Vinesh Bhogat was disqualified due to weight gain of 100 grams while advancing to the semi-finals.
🎖️Sri Lanka squad announced for Test series against England.
🎖️Sri Lanka won the India-Sri Lanka ODI series by 2-0.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment