1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள் விலை 45 சதவீதம் உயர்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, August 14, 2024

1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள் விலை 45 சதவீதம் உயர்வு

1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள் விலை 45 சதவீதம் உயர்வு 1 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள் விலை 45 சதவீதம் உயர்ந்துள்ளது. 
சமச்சீர் கல்வி முறை தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கி வரும் 1 முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளில் கடந்த 2011-ம் ஆண்டு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒரே பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. வகுப்பு வாரியாக புத்தகங்களை அச்சிட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வழங்கியது. அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவசமாகவும், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்தும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டும் வருகிறது. 

45 சதவீதம் அதிகரிப்பு

இந்த நிலையில், காகிதத்தின் விலை ஏற்றம், அச்சிடுவதற்கான மை விலை உயர்வு, பணியாளர்களின் கூலி அதிகரிப்பு காரணமாக தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதை ஈடுகட்டும் வகையில், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்தகங்களின் விலையை உயர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடைசியாக 2018-2019-ம் கல்வியாண்டில் பாடப்புத்தகங்கள் விலை உயர்த்தப்பட்டது. தற்போது, 5 ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த 5 ஆண்டுகளில் புத்தக உற்பத்தி பொருட்களான காகிதம் 55 சதவீதமும், மேலட்டை 27 சதவீதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, ஒரு புத்தகத்துக்கான உற்பத்தி செலவினம் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையைவிட சராசரியாக 45 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 

விலை உயர்வு எவ்வளவு? 

இதையடுத்து நடப்பாண்டில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்களின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தது ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.90 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 முதல் ரூ.40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 முதல் 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 8-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.40 முதல் ரூ.70 வரையும், 9 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு ரூ.50 முதல் ரூ.90 வரையும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்கள் விலை உயர்வுக்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் விலை சராசரியாக 40 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன. 7-ம் வகுப்புக்கான பாடப்புத்தகத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் ரூ.1,200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விலைகளை குறைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment