அரசு பள்ளிகளில் 10000 ஆசிரியர் காலியிடங்கள்; கலந்தாய்வுக்கு பின் பள்ளிக்கல்வித் துறை தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 10, 2024

அரசு பள்ளிகளில் 10000 ஆசிரியர் காலியிடங்கள்; கலந்தாய்வுக்கு பின் பள்ளிக்கல்வித் துறை தகவல்

அரசு பள்ளிகளில் 10000 ஆசிரியர் காலியிடங்கள்; கலந்தாய்வுக்கு பின் பள்ளிக்கல்வித் துறை தகவல்
தமிழக அரசுப் பள்ளிகளில் 10000க்கும் மேல் ஆசிரியர் பணியிடங்கள் காலி; பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பின் பள்ளிக்கல்வித்துறை தகவல்; விரைந்து நிரப்ப கல்வியாளர்கள் கோரிக்கைஅரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில், அரசுப் பள்ளிகளில் 10000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு கடந்த ஜூலை 1 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்று தாங்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் பெற்றனர். 

மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசுப் பள்ளிகளில் 5,786 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 892, திருவண்ணாமலையில் 720, திருப்பூரில் 500, தருமபுரியில் 413, புதுக்கோட்டையில் 379, சேலத்தில் 289 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேசமயம் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எதுவும் இல்லை என தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதேபோல், அரசுப் பள்ளிகளில் 2000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், 2,600-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்தவகையில், ஒட்டுமொத்தமாக தமிழக அரசுப் பள்ளிகளில் 10000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த கடந்த மார்ச் முதல் ஜூன் வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியானோர் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தனர். 

மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், ஆசிரியர் காலியிடங்கள் பெற்றோர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். எனவே விரைந்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

“துளிர்கல்வியின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/+yqXoNehuLqVlN2U1

No comments:

Post a Comment