118 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி இடங்களுக்கு தேர்வு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, August 11, 2024

118 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி இடங்களுக்கு தேர்வு

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் வரும் 118 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி என் பி எஸ் சி) கடந்த மே மாதம் 15-ம் தேதி வெளியிட்டது.

இந்த 118 இடங்களுக்கு 5 ஆயிரத்து 342 ஆண்களும், 7 ஆயிரத்து 797 பெண்களும், ஒரு திருநங்கை என மொத்தம் 13 ஆயிரத்து 140 தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர். 

இவர்களுக்கு தமிழ் தகுதி தாள் தேர்வு, பொது பாடத் தேர்வு மற்றும் பாடம் சார்ந்த தேர்வும் நடைபெற உள்ளது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) தமிழ் தகுதி தாள் தேர்வு மற்றும் பொது பாடத்தேர்வும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகிற 19, 20, 21-ம் தேதிகளில் பாடம் தொடர்பான தேர்வும் நடக்க உள்ளது.

No comments:

Post a Comment