சட்ட உதவி மைய அலுவலகத்தில் காலி பணியிடங்கள்! 13/09/2024 கடைசி நாள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 31, 2024

சட்ட உதவி மைய அலுவலகத்தில் காலி பணியிடங்கள்! 13/09/2024 கடைசி நாள்

சட்ட உதவி மைய அலுவலகத்தில் காலி பணியிடங்கள்! 13/09/2024 கடைசி நாள் கடலூர் மாவட்ட சட்ட உதவி மைய அலுவலகத்தில் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 13-ந்தேதி கடைசிநாளாகும். காலி பணியிடங்கள் கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 


கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கி வரும் சட்ட உதவி எதிர் பாதுகாப்பு முகமை மைய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வக்கீல்கள், தலைமை சட்ட உதவி பாதுகாப்பு அலுவலர் - 1 பதவி, தலைமை துணை சட்ட உதவி பாதுகாப்பு அலுவலர் - 2 பதவி, உதவி சட்ட பாதுகாப்பு அலுவலர் - 4 ஆகிய பதவிகளுக்கு பணியாற்ற விண்ணப்பிக்கலாம். மேலும் அலுவலகத்தில், உதவியாளர் - 2 இடங்கள் மற்றும் அலவலக உதவியாளர் - 2 பதவிகள் ஆகிய பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். 

13-ந்தேதி கடைசி நாள் கடலூர் மாவட்ட நீதிமன்ற இணையதள முகவரியில் (https://districts.ecourts.gov.in/cuddalore) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து 13.9.2024 அன்று மாலை 5 மணிக்குள் தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடலூர் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள இணைய வழி இணைப்பில் (லிங்) உள்ள விண்ணப்ப படிவத்திலும் தவறாமல் பூர்த்தி செய்யப்பட வேண்டும். 

இந்த பதவிகளுக்கான நேர்காணல் 21.9.2024 அன்று கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் காலை 11 மணி அளவில் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வரும்போது விண்ணப்பங்களில் இணைத்துள்ள ஆவணங்களின் அசல் ஆவணங்களுடன் காலை 9.30 மணி அளவில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment