நர்சிங் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 1,376 பணி இடங்களை நிரப்ப போட்டி தேர்வு: இம்மாதம் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 15, 2024

நர்சிங் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 1,376 பணி இடங்களை நிரப்ப போட்டி தேர்வு: இம்மாதம் 17ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

நர்சிங் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 1,376 பணி இடங்களை நிரப்ப போட்டி தேர்வு: ஆக.17 முதல் விண்ணப்பிக்கலாம் 

நர்சிங் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர் பதவிகளில் 1376 காலியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடத்தப்படும் என்றும் இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆக.17-ம் தேதி(சனி) தொடங்கும் என்றும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப் பில் கூறப்பட்டு இருப்பதாவது: 
டயட்டீசியன், 
நர்சிங் கண்காணிப்பாளர், 
ஸ்பீச் தெரபிஸ்ட், 
டயலசிஸ் டெக்னீசியன், 
சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர் (கிரேடு-3) 
ஆய்வக கண்காணிப்பாளர், 
பார்மசிஸ்ட்,
ரேடியோகிராபர் உள்பட 20 வகையான பதவிகளில் 1376 காலியிடங் களை போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. 
இதற்கான விண் ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன.ஒவ்வொரு பதவிக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 21 வரையும் அதிகபட்சம் 43 வரையும் பதவிக்கு பதவிக்கு மாறுபடும். வயது வரம்பில், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.நேர்முகத் தேர்வு கிடையாது: 

ஆன்லைன் விண்ணப்ப பதிவு (www.rrbchennai.gov.in)ஆக. 17-ம் தேதி (சனி) தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் செப். 16-ம் தேதி ஆகும். ஆன்லைனில் விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால் செப்.17 முதல் 26 வரை செய்துகொள்ளலாம். 
பணிநியமனம் போட்டித்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் நடைபெறும். நேர்முகத்தேர்வு கிடையாது. போட்டித்தேர்வு கணினி வழியில்நடைபெறும். தேர்வு நாள், நேரம் பின்னர் அறிவிக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, பதவிகளின் காலியிடங் கள், கல்வித்தகுதி, தேர்வுமுறை, தேர்வுக்கான பாடத் திட்டம், தேர்வு கட்டணம் உள்ளிட்டவிவரங்களை ஆர்ஆர்பி இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம் என ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment