இன்னும் 17 மாதங்களில் 18 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன! டி.என்.பி.எஸ்.சி. மும்முரம்! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 27, 2024

இன்னும் 17 மாதங்களில் 18 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன! டி.என்.பி.எஸ்.சி. மும்முரம்!

இன்னும் 17 மாதங்களில், 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தொடங்கி உள்ளது. 
முதல்-அமைச்சர் நடவடிக்கை 

தமிழகத்தை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் (ரூ.82 லட்சம் கோடி) பொருளாதாரமாக உயர்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகளவில் உருவாக்கி வருகிறார். 

அதோடு, வேலைவாய்ப்பின்மை என்ற நிலை தமிழகத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக தனியார் துறை மட்டுமின்றி அரசு துறைகளிலும் வேலைவாய்ப்புகளைtk வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் 65 ஆயிரத்து 483 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 77 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். 

அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக மட்டும் 17 ஆயிரத்து 595 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்த டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பதவிக்கு, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். 

பொறுப்பேற்பு 

பொதுவாக இந்த தலைவர் பணியிடங்களுக்கு ஓய்வுபெற்ற அதிகாரிகளைத்தான் நியமனம் செய்வார்கள். ஆனால் இந்த முறை, வருவாய்த்துறை ஆணையராக இருந்த எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்கு கவர்னரும் உடனே ஒப்புதல் அளித்தார். அவர் தற்போது தலைவராகtk பொறுப்பேற்று இருக்கிறார். அதனைத்தொடர்ந்து அரசு பணியாளர் தேர்வாணையம் மும்முரமாக செயல்பட தொடங்கி உள்ளது. 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தை இலக்காக கொண்டு இன்னும் 17 மாதங்களில் குறைந்தது 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. 

இந்த எண்ணிக்கை அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது. தற்போது அரசு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. துறை வாரியான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்த அடிப்படையில் தேர்வுகள் குறித்தtk அறிவிப்புகள் வெளியாக உள்ளன. அதேபோல் தேர்வு முடிவுகளையும் முன்பு போல் அல்லாமல் மிக விரைவாக வெளியிடவும் அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டு வருகிறது. எனவே அரசு பணியை விரும்புபவர்கள் தங்களை முழு அளவில் தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ளலாம். இனி ஒவ்வொரு மாதமும் அரசு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளிவரலாம். 

நன்றாக தேர்வு எழுதினால்... 

ஒவ்வொரு தேர்வும் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட உள்ளன. இதுகுறித்து தேர்வாணைய தலைவர் எஸ்.கே.பிரபாகரிடம் கேட்டபோது, நன்றாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நிச்சயம் அரசு பணி கிடைக்கும் என்றார்.

No comments:

Post a Comment