‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் அரசுக்கு ரூ.360 கோடி நிதி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, August 13, 2024

‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின் கீழ் அரசுக்கு ரூ.360 கோடி நிதி அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தகவல்

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் கிடைத்துள்ள ரூ.360 கோடி நிதி நல்ல திட்டங்களுக்கு செலவிடப்படும் என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
புதிய கணினி ஆய்வகம் ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு ஹோபார்ட் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, தாயார் சாகிப் தெரு அரசு முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் ‘வெர்ச்சுசா' நிறுவன பங்களிப்பு நிதியில் ரூ.1.70 கோடி மதிப்பில் 5 கணினி ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வகங்களை திறந்துவைக்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, கணினி ஆய்வகங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- 

 ரூ.360 கோடி நிதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த நிதி ரூ.5 லட்சத்தை வழங்கி ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தை தொடங்கிவைத்தார். சமூகத்துக்கு நம்மால் முடிந்த பங்களிப்பை அளிக்கும் வகையில் பல்வேறு நபர்கள் அளித்த நிதி தற்போது ரூ.360 கோடி சேர்ந்துள்ளது. நேர்மையான வகையில் இந்த நிதி செலவிடப்படும். நல்ல திட்டங்களுக்கு இந்த தொகை செலவிடப்படும். தற்போது, கல்விக்கு செய்யும் முதலீடு எதிர்காலத்தில் மாணவர்களிடம் இருந்து நல்ல வட்டியை தரும். பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது பங்களிப்பை நிதியாகவும், உழைப்பாகவும் வழங்க 7.5 லட்சம் நபர்கள் விழுதுகள் திட்டத்தில் பதிவு செய்துள்ளார்கள். மாணவர்கள் நன்றாக படித்து எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை நல்வாழ்க்கையாக அமைய வேண்டும் என ஆசிரியர் சமூகம் விரும்பும். எனவே, மாணவர்கள் நன்றாக படித்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment