மத்திய தபால் துறையின் சார்பில் தபால் தலை சேகரிப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் விதமாக "தீன்தயாள் பார்ஷ் யோஜனா" என்னும் உதவித்தொகை திட்டம் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது.
2024-2025-ம் ஆண்டுக்கான தீன்தயாள் பார்ஷ் யோஜனா தேர்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படும். தேர்வுக்கு 6 முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளியின் மூலம் விண்ணப்பிக்கலாம். அவர்கள் பள்ளி இறுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்கள் பள்ளியின் தபால்தலை சேகரிப்பு கிளப்பில் உறுப்பினராக அல்லது தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.
புதிதாக தபால்தலை சேகரிப்பு கணக்கை நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் ரூ.200 செலுத்தி தொடங்கலாம். போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை www.tamilnadupost.cept.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் அடுத்த மாதம்(செப்டம்பர்) 4-ந் தேதி ஆகும். அனுப்ப வேண்டிய முகவரி, தி சூப்பிரண்டு ஆப் போஸ்ட் ஆபீசஸ், கன்னியாகுமரி டிவிஷன், நாகர்கோவில்- 629001" ஆகும். முதல் கட்ட எழுத்து வினாடி-வினா போட்டி அடுத்த மாதம் 28-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ-மாணவிகள் தபால் தலை சேகரிப்பு என்ற தலைப்பில் செயல்திட்ட அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment