ரூ.63,200 ஊதியத்தில் அஞ்சல் துறையில் வேலை! கடைசி நாள்: 30.8.2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 26, 2024

ரூ.63,200 ஊதியத்தில் அஞ்சல் துறையில் வேலை! கடைசி நாள்: 30.8.2024

பணி: Skilled Artisans காலியிடங்கள்: 10 டிரேடு வாரியான காலியிடங்கள் விவரம்: 1. M.V. Mechanic - 4 2. M.V. Electrician - 1 3. Tyre Man - 1 4. Blacksmith - 3 5. Carpenter - 1 சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200 வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

வயதுவரம்பில் அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எம்வி மெக்கானிக் பாடப்பிரிவிற்கு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்ச தகுதியான 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: டிரேடு தேர்வில் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் இடம், நாள், பாடத்திட்ட விவரம் தேர்வு நுழைவுச்சீட்டு மூலம் தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. கட்டணத்தை இந்திய அஞ்சல் வில்லையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணபத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பித்தின் உறையின் மீது விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Senior Manager. Mail Motor Service, No:37, Greams Road, Chennai - 600 006

No comments:

Post a Comment