புன்னகை
பொதுவாக மகிழ்ச்சியாக இருக்கும்போது பலரும் புன்னகைப்பார்கள். அப்படி புன்னகைக்கும்போது மூளையில் இருந்து டோபமைன் ஹார்மோன் வெளியாகும். அது மகிழ்ச்சியான மனநிலைக்கு வித்திடும். புன்னகைக்கும், மகிழ்ச்சிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை ஆய்வுகளும் உறுதிபடுத்தியுள்ளன. முகபாவனைகள் உணர்ச்சிகளில் மிதமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். மனம் பலவீனமாக இருப்பதாக உணரும்போதெல்லாம் புன்னகைத்து பாருங்கள். அது மன நிலையை எவ்வாறு மாற்றுகிறது என்பதை உணரலாம்.
உடற்பயிற்சி உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்குமான மந்திரம் உடற்பயிற்சிதான். வழக்கமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளை குறைக்க உதவும். சுயமரியாதை மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். நடைப்பயிற்சி, யோகா அல்லது எளிமையான ஏரோபிக்ஸ் பயிற்சிகளையும் செய்து வரலாம்.
சாப்பாடு
உணவு தேர்வும் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சர்க்கரை மற்றும் மாவுச்சத்து அதிகம் கொண்ட உணவுகள் செரோடோனின் போன்ற நல்ல ஹார்மோனை வெளியிட உதவும். இறைச்சி வகைகள், பருப்பு, பால் ஆகியவற்றில் புரதம் அதிகமாக உள்ளடங்கி இருக்கும். இவையும் டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் ஹார்மோன்களை வெளியிடச் செய்து உடல் ஆற்றலை அதிகரிக்கும். மீனில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூளை ஆரோக்கியத்திற்கும் பலம் சேர்த்து மன நிலையை மேம்படுத்தி மகிழ்ச்சியை தக்கவைக்க உதவிடும்.
தூக்கம்
தினமும் குறைந்தது 8 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும். இந்த தூக்க சுழற்சி முறை மனநிலையை மேம்படுத்தும். உடலுக்கும், மனதுக்கும் தேவையான ஓய்வை அளிக்கும். மனச்சோர்வு, நீரிழிவு, இதய நோய் போன்ற நாள்பட்ட நோய் அபாயத்தையும் குறைக்கும். மனதில் மகிழ்ச்சியை தக்கவைக்க வழிவகை செய்யும்.
ஒப்பீடு மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப்பார்த்து வருத்தப்படுவது ஒருபோதும் மகிழ்ச்சியான மன நிலைக்கு வித்திடாது. மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும். சுயமரியாதையை குறைக்கும். பிறருடன் ஒப்பிட்டு பார்க்கும் வழக்கத்தை கைவிடுவது உள் மன அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் வித்திடும்.
மொபைல்போன்
மொபைல்போன்களை அதிக நேரம் பார்வையிடுவது மனநிலையை பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். மூளை சேதம் அடைவதற்கும் காரணமாகிவிடும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடத்தில் அறிவாற்றல் குறைபாடு பிரச்சினையை ஏற்படுத்தும். உணர்ச்சிகளை கையாள்வதிலும் பாதிப்பை தரும். நீங்கள் மகிழ்ச்சியைத் தேடுகிறீர்கள் என்றால் மொபைல்போன்களின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். பகல் நேரத்தில் தினமும் சிலமணி நேரங்களாவது மொபைல்போனை முற்றிலும் ஒதுக்கி வையுங்கள்.
உடல் பரிசோதனை
வயதாகும்போது, ஆரோக்கியம் தொடர்பானசவால்களை எதிர்கொள்வது இயற்கையானது. இருப்பினும் மகிழ்ச்சியை மேம்படுத்த எந்தவொரு நோய் தாக்குதலையும் சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையைப் பெறுவதற்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியமானது. அது மகிழ்ச்சியான மன நிலை நீடிக்க துணைபுரியும்.
No comments:
Post a Comment