டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சர்வேயர் போன்ற 861 காலியிடங்கள் | விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.9.2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, August 26, 2024

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சர்வேயர் போன்ற 861 காலியிடங்கள் | விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.9.2024

டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்புடெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சர்வேயர் போன்ற 861 காலியிடங்கள் 


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: உதவி சோதனையாளர் - 2 பணி: உதவி பயிற்சி அலுவலர்(சுருக்கெழுத்து ஆங்கிலம்) - 3 பணி: திட்ட உதவியாளர் நிலை-II - 3 பணி: இயக்கூர்தி ஆய்வாளர் நிலை-II - 45 பணி: வரைவாளர் நிலை-II - 183 பணி: விடுதிக் கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் - 2 பணி: இளநிலை வரைதொழில் அலுவர் - 127 பணி: இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் - 2 பணி: சிறப்பு பணிப்பார்வையாளர் - 22 பணி: அளவர் - 15 பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 10 பணி: உதவி வேளாண்மை அலுவலர் - 25 பணி: மேற்பார்வையாளர் -4 பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 15 பணி: செயற்பணியாளர்(ஆய்வகம்) - 9 பணி: தொழில்நுட்பவியலாளர் - 79 பணி: வரைவாளர் பணி: அளவர் மற்றும் வரைவாளர் - 42 தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ, மூன்றாண்டு டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாத்து தெரிந்துகொள்ளவும். வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், அதே பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42-க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50-க்குள்ளும், பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினர்களான எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் ஆதரவற்ற விதைகளுக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் பணிக்குரிய முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: தமிழ் மொழித் திறனாய்வுத் தேர்வு: 9.11.2024 முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: 11.11.2024 முதல் 14.11.2024 தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.9.2024

No comments:

Post a Comment