அரசுப் பள்ளி கட்டட உறுதித்தன்மை:
விவரம் அனுப்ப கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளிக் கட்டடங்களின் உறு
தித்தன்மையை ஆய்வு செய்து அது குறித்து விவரங்களை
அனுப்பி வைக்குமாறு தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்
தியுள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநர்
நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்க
ளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
அண்மையில் தலைமைச் செயலர் தலைமையில் நடை
பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளின்
கட்டடங்களையும் ஆய்வு செய்து 100 சதவீதம் உறுதித் தன்
மையுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்
எனவும், பராமரிப்புப் பணிகள் தேவைப்பட்டால் பொதுப்
பணித் துறை அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்
பின் ஒத்துழைப்புடன் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்
கொள்ள வேண்டும்.
அதுமட்டுமன்றி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கட்ட
டங்களை ஆய்வு செய்து தற்காலிகமாக பராமரிப்புப் பணி
கள் தேவைப்படும் பள்ளிகள் குறித்த விவரங்களை அரசுக்கு
இரு வாரங்களுக்குள் அனுப்ப வேண்டும்.
அதன் அடிப்படையில், அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநி
லைப் பள்ளிகளை பார்வையிட வருகை தரும் மாவட்ட ஒருங்
கிணைந்த பள்ளிக் கல்வி பொறியாளருக்கு சம்பந்தப்பட்ட
கல்வி அலுவலர்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், அவர்கள் உதவியுடன் தற்காலிகமாக பராமரிப்புப்
பணிகள் தேவைப்படும் பள்ளிகளின் விவரங்களை அறிக்கை
யாக தொகுத்து வரும் 28-ஆம் தேதிக்குள் இயக்குநரகத்துக்கு
அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுப்பிவைக்க
வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment