அதிக அளவில் இனிப்பு பொருட்களை உட்கொள்வது உடலில் பல நோய்களை உருவாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, செயற்கை இனிப்பு கலந்த பானங்களை உட்கொள்வதால் இளம் வயது சிறுவர்-சிறுமியர் மற்றும் பெரியவர்களின் உடல் எடை அதிகரிக்க காரணமாகிறது.
பொதுவாக, அதிகப்படியான இனிப்பு நுகர்வு வளர்சிதை மாற்ற நோய்களை உருவாக்கும். இது இன்சுலின் எதிர்ப்பு, உயர் ரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் வகை-2 நீரிழிவு நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இனிப்பு உணவுகளில் உள்ள பிரக்டோஸ் இன்சுலின் சிக்னலை குறைத்து கல்லீரலில் கொழுப்பு படிவதை ஊக்குவிக்கும். இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும். அதிக இனிப்பு கலந்த உணவு இதய நோய்களுக்கு காரணமாகிறது.
இனிப்பு கலந்த உணவுகளை உட்கொள்வது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் மூளையின் வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனம் அடைய செய்வதும் கண்டறியப்பட்டு உள்ளது.
பொதுவாக ஆய்வு முடிவுகள் கூறுவது என்னவென்றால், இனிப்பு கலந்த உணவுகளின் நுகர்வு உடல் பருமன், வளர்சிதை மாற்றக் கோளாறுகள், இதய வீக்கம் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதே வேளையில், உடலின் ஆற்றலுக்கு குறிப்பிடத்தக்க அளவு இனிப்பு சுவை தேவையாகிறது.
அந்த இனிப்பு சுவை என்பது இயற்கை பழங்களில் இருந்து பெறுவதாக இருந்தால் நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment