2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில்,
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் /
நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழா (ஆகஸ்ட்-15)
மற்றும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று (டிசம்பர்-3) வழங்கப்படும்
மாநில விருதுகளுக்கான விருதாளர்களை தேர்வு செய்யும் மாநில
அளவிலான தேர்வுக் குழு மாற்றியமைக்கப்பட்டு ஆணை
வெளியிடப்பட்டுள்ளது.
3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2019-ஆம்
ஆண்டு முதல் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களில் சிறந்த
பணியாளர்களுக்கான மாநில விருதினை 5-லிருந்து 10-ஆக உயர்த்தியும்
தொழு நோயிலிருந்து குணமடைந்த 'பணியாளர் பிரிவினை, நடமாட
இயலாதோருக்கான விருது பிரிவுடன் சேர்த்தும் மற்றும் 5 கூடுதல் விருதுகள்
வழங்கிட ஏதுவாக தலா 10 கிராம் எடையுள்ள 5 எண்ணிக்கையிலான 22
கேரட் தங்கப்பதக்கமும் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்க ரூ.1,81,800/-
கூடுதல் நிதி ஒதுக்கீடும் செய்து ஆணை வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment