இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு இளங்கலை பட்டதாரிகளிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant
காலியிடங்கள்: 15
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant(Finance)
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியல், கணிதவியல், புள்ளியில் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கு ஏழாவது ஊதியக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: சிபிடி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.1,000. எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.700. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.imu.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.8.2024
No comments:
Post a Comment