தமிழகத்தில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகள், ஒரு இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி, 21 தனியார் மருத்துவ கல்லூரிகள், 3 மாநில தனியார் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 9 ஆயிரத்து 50 எம் பி பி எஸ் இடங்கள் உள்ளன. அதேபோல், 3 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 200 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன.
இதற்கான, 2024, 25-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. மாணவ, மாணவிகள் எம் பி பி எஸ் மற்றும் பி.டிஎஸ். படிப்புகளுக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
இதுவரை, 37 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், விண்ணப்ப பதிவு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, எம் பி பி எஸ், பி.டி.எஸ்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. மாணவர்கள், https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தரவரிசை பட்டியல் வருகிற 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மாநில அரசு ஒதுக்கீடு முதல் கட்டகலந்தாய்வை ஆகஸ்டு 21-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், மருத்துவப்படிப்பில் விளையாட்டு பிரிவுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் இன்று நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment