கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மீண்டும் வழங்கப்படுமா? அரசின் பதில் இதுதான்? - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 15, 2024

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மீண்டும் வழங்கப்படுமா? அரசின் பதில் இதுதான்?

கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி மீண்டும் வழங்கப்படுமா? அரசின் பதில் இதுதான்? 
கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தொகை எப்பொழுது வழங்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தரப்பிலும் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

நாடாளுமன்றத்திலும் இது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டு அரசு அதற்கு பதிலும் தந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அகவிலை படியை வழங்குவது குறித்து அரசு என்ன முடிவு எடுத்திருக்கிறது. 

அவர்களுக்கு தற்போது அது வழங்கப்படுமா என ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சரான பங்கஜ் சவுத்ரி தற்போதைக்கு அந்த முடிவு எதுவும் இல்லை என பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள பங்கஜ் சவுத்ரி, 01.01.2020, 01.07.2020 & 01.01.2021 ஆகிய மூன்று தவணைகளிலும் அறிவிக்க வேண்டிய அகவிலைப் படியானது நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தான். அந்த சமயத்தில் அரசுக்கு நிதி ரீதியான நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்காகவே அகவிலைப்படி என்பது நிறுத்தி வைக்கப்பட்டது. 

ஏனெனில் அந்த சமயத்தில் அரசு பல்வேறு சமூக நல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது என தெரிவித்திருந்தார். தற்போதைக்கு அதனை திரும்ப வழங்குவதற்கான பரிசீலனை எதுவும் நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார். இதனிடையே அகவிலைப்படி தொடர்பாக யூனியன்களிடமிருந்து ஏதேனும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள சவுத்ரி 2024 ஆம் ஆண்டில் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடமிருந்து இது தொடர்பாக கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். 

முன்னதாக இது தொடர்பாக பேசிய அமைச்சர் சவுத்ரி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை நிறுத்தி வைத்ததன் மூலம் கொரோனா காலத்தில் அரசு 34,42.32 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியதாகவும் அதனை கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சரி செய்ய பயன்படுத்தியதாகவும் கூறியிருந்தார். கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட போது மத்திய அரசு ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை 18 மாதங்களுக்கு அகவிலைப்படியை நிறுத்தி வைத்திருந்தது. இதனை வழங்க வேண்டும் என தொழிலாளர் யூனியன்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 

பல்வேறு கடிதங்களும் மத்திய நிதி துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பணவீக்கத்திற்கு ஏற்ப அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதுண்டு. கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 50 % என உயர்த்தப்பட்டது.

No comments:

Post a Comment