இளநிலை மருத்துவ படிப்புக்கு ‘சென்டாக்’ இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 31, 2024

இளநிலை மருத்துவ படிப்புக்கு ‘சென்டாக்’ இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு


புதுச்சேரி சென்டாக் இணையதளத்தில் https://www.centacpuducherry.in எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம் மற்றும் கால்நடை ஆகிய மருத்துவ படிப்புக்கான இறுதி தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரசு, நிர்வாகம், நிர்வாகம் (தெலுங்கு சிறுபான்மையினர், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர்), வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆகியவற்றுக்கென தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது. 

இதில் அரசு ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம் ஆகிய படிப்புகளுக்கு-519, நிர்வாகம் மற்றும் சுயநிதி எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம்-254, நிர்வாகம் தெலுங்கு சிறுபான்மையினர்-12, (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.), நிர்வாகம் கிறிஸ்தவ சிறுபான்மையினர் -9, (எம்.பி.பி.எஸ்), வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்-71 (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கால்நடை மருத்துவம்) என இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்குள் தெரிவிக்க வேண்டும். இடம் கிடைத்தவர்கள் வருகிற 2-ந் தேதி முதல் 5-ந் தேதி மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் தங்களின் அசல் சான்றிதழ்களை கொடுத்து சேரலாம். 

மேலும் விவரங்கள் மாணவர்கள் சென்டாக் இணையதளத்தை பார்வையிடலாம். புதுவை மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பல் மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதுவை மாணவர்களுக்கு கல்வி கட்டணமாக ரூ.92 ஆயிரத்து 950, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 370, சுயநிதி பிரிவுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment