மழைக்காலத்தில் பேரிக்காய் ஏன் சாப்பிட வேண்டும்? படிங்க! - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 22, 2024

மழைக்காலத்தில் பேரிக்காய் ஏன் சாப்பிட வேண்டும்? படிங்க!

மணி வடிவத்தில் காட்சி அளிக்கும் பேரிக்காய் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புழக்கத்தில் இருப்பதாக வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றன. அவை பழங்காலம் முதலே மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்பட்டு ஆரோக்கியத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன. பேரிக்காயில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் சி, கே, பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. 
பருவ மழை காலமான ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் அதிகம் விளைகின்றன. மழை காலமான அந்த சமயத்தில் பேரிக்காய் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம். 

 அல்சைமர் - டிமென்ஷியா முதுமை பருவத்தில் பலரும் எதிர்கொள்ளும் அல்சைமர், டிமென்சியா போன்ற மறதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை குறைப்பதற்கும் பேரிக்காய் பயன்படும். பேரிக்காய் சாப்பிடுவது அனைத்து வகையிலும் டிமென்ஷியா பாதிப்பு அபாயத்தை குறைக்கும் என்பது ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 புற்றுநோய் தினசரி உணவு வழக்கத்தில் பேரிக்காய் சேர்த்துக்கொள்வது புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும். ஏனெனில் அவை புற்றுநோயை எதிர்த்துப்போராடும் சேர்மங்களை கொண்டுள்ளன. குறிப்பாக பேரிக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் பிளாவனாய்டுகள் புற்றுநோயில் இருந்தும் பாதுகாக்கிறது. தினமும் பேரிக்காய் சாப்பிடுவது செரிமான ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். பேரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், குடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 

 ரத்த அழுத்தம்: பேரிக்காயில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. அது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், இதய நோய்களை தடுக்கவும் வழிவகுக்கும். பிரான்டியர்ஸ் இன் நியூட்ரிஷன் இதழின்படி பேரிக்காயில் உள்ள அந்தோசயனின், கரோனரி தமனி எனப்படும் இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கும். 

 கொலஸ்ட்ரால்: தாமிரம், பொட்டாசியம் போன்ற முக்கியமான தாதுக்கள் பேரிக்காயில் உள்ளன. அவை கொலஸ்ட்ராலை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஓபன் ஹார்ட் ஜர்னல் ஆய்வறிக்கையில், ரத்தத்தில் அதிக கொழுப்பு படிவதால் ஏற்படும் ஹைபர் கொலஸ்டிரோலீமியா என்னும் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் 45 நாட்களுக்கு தினமும் 5 மி.கி தாமிரம் சேர்த்துக்கொண்டால் எல்.டி.எல் எனப்படும் கெட்டக்கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடுகள் குறையும். எச்.டி.எல். எனப்படும் நல்ல கொழுப்பு அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 நீரிழிவு: குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுப்பொருட்களில் பேரிக்காயும் ஒன்று. குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு பேரிக்காய் வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆப் கிளினிக்கல் நியூட்ரிஷன் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி பேரிக்காய் உட்கொள்வது நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்கும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி புரியும். பேரிக்காயில் உள்ள அந்தோசயனின் கரோனரி தமனி நோயில் இருந்து பாதுகாக்கும்.

No comments:

Post a Comment