மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 31, 2024

மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாணவ-மாணவிகள் திருக்குறல் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். 

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

உலக பொதுமறையான திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு கல்வி அறிவோடு, நல் ஒழுக்கமிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் ‘திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசாக தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் திறன் கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். 

இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்களை அறிந்திருக்க வேண்டும். மேலும் அதன் பொருளை அறிந்திருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும். ஏற்கனவே இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர்கள் மீண்டும் பங்கேற்க இயலாது. மாணவ, மாணவிகள் எனவே இந்த போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நாமக்கல் மாவட்ட மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெறலாம். அல்லது https://tamilvalarchithurai.tn.gov.in// என்ற தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment