அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படித்த மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரித்திட மாதம் ரூ,1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதேபோல், மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட ‘தமிழ் புதல்வன்' என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) கோவையில் நடக்கிறது. இந்த தொடக்க நிகழ்ச்சியை அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு அனைத்து மாணவர்களும் பார்க்கும் வகையில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும், அவ்வாறு ஏற்பாடு செய்ததையும், மாணவர்கள் அதன் மூலம் தொடக்க நிகழ்ச்சியை கண்டுகளித்த அறிக்கையையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment