திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் தேசிய சுகாதார குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.08.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ANM/ Multipurpose Health Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : DGNM/ ANM/ B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Audiologist & Speech Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி : Bachelor Degree in Speech and Language Pathology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Physiotherapists
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி : BPT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruvannamalai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: கௌரவச் செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட சுகாதார அலுவலகம், துணை சுகாதார பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.08.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://tiruvannamalai.nic.in/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
No comments:
Post a Comment