மைக்ரோபயாலஜி படிப்பும், வேலைவாய்ப்பும்..! | Microbiology study and Placement - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 17, 2024

மைக்ரோபயாலஜி படிப்பும், வேலைவாய்ப்பும்..! | Microbiology study and Placement


Join WhatsApp - Click Here

நம்மை எங்கேயும் எப்போதும் சூழ்ந்திருக்கும் சிறுசிறு உயிர்களான பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றைப் பற்றிப் படிக்கும் படிப்பு, மைக்ரோ பயாலஜி எனப்படும் நுண்ணுயிரியல். இந்தப் படிப்புக்கு மருத்துவம், உணவு, மாசு கட்டுப்பாடு, தடயவியல் போன்ற துறைகளில் மிகுந்த முக்கியத் துவம் உள்ளது. இப்படிப்புக்கான பாடங்கள், மேற்படிப்பு, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம். 
மைக்ரோ பயாலஜி நம்மைச் சுற்றி இருக்கும் நுண்ணுயிரிகள், அவற்றால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள், அதை எவ்வாறு ஆக்கப்பூர்வச் செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம், நுண்ணுயிரிகள் ஏற்படுத்தவல்ல தீமைகள், அதற்கான அடிப்படை சிகிச்சைகள் மற்றும் அதைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கைகள்... என நுண்ணுயிரிகள் பற்றிய அறிவியல் மற்றும் மருத்துவத் தகவல்களே மைக்ரோ பயாலஜி படிப்பு. உதாரணத்துக்கு, ஒரு பாக்டீரியாவைக் கொண்டு உணவு தயாரிக்க முடியும் என்றால் எப்படி அந்த உணவைத் தயாரிப்பது, ஒரு வைரஸ் மூலம் நோய் பரவும் என்றால் எப்படி அதைத் தடுப்பது போன்றவை. மேலும் எங்கும் எதிலும் உள்ள நுண்ணு யிரிகள், அவற்றின் நச்சுத்தன்மை விகிதம் ஆகியவற்றையும் செயல்முறைக் கல்வியாகப் பயிலலாம். 
யாரெல்லாம் படிக்கலாம்? பன்னிரெண்டாம் வகுப்பில் பயாலஜி, பயோ பாட்டனி, பயோ ஜூவாலஜி, பயோ அக்ரி, மைக்ரோ பயாலஜி ஆகியவற்றை முதன்மைப் பாடங்களாகப் படித்தவர்கள் இளங்கலை பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜி படிப்பை படிக்க முடியும். 

பாடத்திட்டம் அக்ரிகல்ச்சர் கெமிஸ்ட்ரி, வைராலஜி, உணவு, மருத்துவம், சுற்றுச்சூழல் நுண்ணுயிரியல், ஜெனிடிக்ஸ், பயோ பெர்டிலைசர்ஸ் எனப்படும் இயற்கை உரம், தொழில்துறை நுண்ணுயிரியல், பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் அப்ளி கேஷன் போன்றவை பாடங்களாகக் கற்றுத்தரப்படும். காளான் உற்பத்தி, மண், காற்று, தண்ணீர் மாசு மற்றும் தரப் சோதனை, ரத்த பரிசோதனை, கடும் நோய்களுக்கான வைரஸ் சோதனை, இயற்கை உரம் தயாரித்தல், நுண்ணுயிரிகள் மூலம் உணவுப் பண்டங்கள் தயாரித்தல், பால் தரம் சோதித்தல் போன்றவற்றை செயல்முறை கல்வியாக மாணவர்கள் படிப்பார்கள். மேலும் உணவு, மருந்து, அழகு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படும் ஸ்பைருலினா எனப்படும் பாசி வகையை ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். 
எங்கு படிக்கலாம்? அண்ணாமலை, பாரதிதாசன், பெரியார் மணியம்மை, திருவள்ளுவர், சாஸ்த்ரா, சென்னை பல் கலைக்கழகம் உள்ளிட்ட பல் கலைக்கழகங்களும், அவற்றின் கீழ் இயங்கும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் மூன்று ஆண்டு இளங்கலை மைக்ரோ பயாலஜி படிப்பை வழங்குகின்றன. மேலும் ஐந்து ஆண்டுகளுக்கான இன்டக்ரேடட் படிப்பும் (இளங்கலை மற்றும் முதுகலை ஒரே படிப்பாக) பல கல்லூரிகளில் உள்ளன. 

மேற்படிப்பு இளங்கலை நுண்ணுயிரியல் படித்தவர்கள் மேற்கொண்டு முதுகலை, பி.எச்டி என நுண்ணுயிரியலில் அடுத்தடுத்துப் படிக்கலாம். மேலும் எம்.எஸ்சி., பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேடிக்ஸ் போன்றவற்றையும் முதுகலை படிப்பாக எடுத்துப் படிக்கலாம். நொதித்தல் (பெர்மென்டேஷன்) , மஷ்ரூம், புட் டெக்னாலஜி போன்ற டிப்ளமோ கோர்ஸ்களும் படிக்கலாம்.
வேலைவாய்ப்பு நுண்ணுயிரியல் படிப்புக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இளங்கலை முடித்தவர்கள் தண்ணீர் மற்றும் உணவு தரம் சோதனையாளர், பயோ மெடிக்கல் சயின்டிஸ்ட், மருத்துவ ஆராய்ச்சியாளர் (நோய்கள், அதற்கான மருந்துகளைக் கண்டுபிடித்து வடி வமைத்தல்), தடயவியல் நிபுணர் (விரல் ரேகை சோதனை), டெக்னிக்கல் பிரியூவர் (நொதித்தல் மூலமாக உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் நுண்ணுயிரி கட்டுப்பாடு), மெடிக்கல் கோடிங் என பிரகாசமான வேலைவாய்ப்புகளைப் பெறலாம். மேற்படிப்பு முடித்தவர்களுக்குப் பேராசிரியர் பணிவாய்ப்புகள் உண்டு.

No comments:

Post a Comment