TNPSC மூலம் தகுதியானவர்கள் தேர்வு 105 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, August 31, 2024

TNPSC மூலம் தகுதியானவர்கள் தேர்வு 105 ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

உதவி பொது மேலாளர், மேலாளர், துணை மேலாளர், கல்லூரி நூலகர், கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் உள்ள 105 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. 
இந்த பணியிடங்களுக்கு www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும், விண்ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி கடைசி நாள் எனவும், விண்ணப்பப் பதிவில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதனை அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை மேற்கொள்ளலாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்து இருக்கிறது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். 

அதன்படி, எழுத்துத் தேர்வு வருகிற நவம்பர் மாதம் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் தாள்-1 தேர்வில், தமிழ்த் தகுதித் தாள், பொது அறிவு மற்றும் திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு தேர்வாக நடக்கும். இந்த தேர்வு 18-ந்தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். தமிழ் தகுதிதாள் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பொது அறிவு, திறனறிவு, மனக்கணக்கு நுண்ணறிவு மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து பாடம் சார்ந்த தேர்வாக தாள்-2 தேர்வு நடத்தப்பட இருக்கின்றன. 

இந்த தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே வெளியிடப்படும். தாள்-1, தாள்-2 எழுத்துத் தேர்வுக்கு 450 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும் என மொத்தம் 510 மதிப்பெண்ணுக்கு, தகுதியான மதிப்பெண் எடுப்பவர்கள் இந்த காலிப்பணியிடங்களில் தேர்வு செய்யப்படுவார்கள்.

No comments:

Post a Comment