மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
கிருஷ்ணகிரி
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணகிரி அலுவலக கட்டுப்பாட்டில்
கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் காலியாக உள்ள 02 மீன்வள உதவியாளர் (Fishery
Assistant) பணியிடங்களை கீழ்கண்ட இனசுழற்சி முறையில் தேர்வு செய்திட விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
1. தமிழில் எழுதப்படிக்க பேச தெரிந்திருக்க வேண்டும்.
2. நீந்துதல், மீன்பிடித்தல், புதிய மீன்பிடி வலை பின்னுதல், பழுதடைந்த வலையினை செப்பணிடுதல்,
வீச்சு வலை வீசுதல் மற்றும் பரிசல் ஓட்டுதல் ஆகிய மீன்பிடி தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க
வேண்டும்.
3. மேற்கண்ட தகுதிகளை தகுதி தேர்வு மற்றும் நேர்காணலில் பரிசோதனை செய்யப்படும்.
4. மீன்வளத்துறையின் மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்று பெற்றிருப்போருக்கு
முன்னுரிமை வழங்கப்படும்.
5.ரூ.15900-58500 (நிலை 2) என்ற சம்பள ஏற்றமுறையில் ஊதியம் வழங்கப்படும் வயதுவரம்பை பொறுத்தமட்டில் 01.07.2024
அன்றுஉள்ளவாறு ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரிவினர் 37 வயதிற்குஉட்பட்டவராகவும்மற்றும்பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர்
34 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் மீன்வள உதவியாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தினை
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கிருஷ்ணகிரி அலுவலகத்தில் அலுவக வேலை நாட்களில் பெற்று
விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
6. விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயது நிருபண சான்றிதழ் நகல், சாதி
சான்றிதழ்நகல்மற்றும் 02பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன்கூடிய பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தினை"மீன்வளம் மற்றும்
மீனவர் நலத்துறைஉதவி இயக்குநர்"அலுவலகம் கிருஷ்ணகிரிமீன்பன்ணை எதிரில்கே.ஆர்.ப்பி.அணை(அஞ்சல்), கிருஷ்ணகிரி
-635101 (கைப்பேசி எண் 93848 24261) என்ற முகவரிக்கு 23.09.2024 அன்று பிற்பகல் 4.00 மணிக்குள் கிடைக்கத்தக்க
வகையில், விண்ணப்ப உறையின் மேல் கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தல்” என
எழுதி நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடல் வேண்டும்.
உதவி இயக்குநர்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
கிருஷ்ணகிரி,
தேர்வுகுழு உறுப்பினர்
துணை இயக்குநர்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
(மண்டலம்) தருமபுரி,
தேர்வுகுழு உறுப்பினர் செயலர்
மாவட்ட ஆட்சியர் / பெருந்தலைவர்
பணியாளர் தேர்வுக்குழு
கிருஷ்ணகிரி
No comments:
Post a Comment