பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 16-09-2024
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்: நட்பு
குறள் எண்:786
முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.
பொருள்:முகம் மட்டும் மலரும் படியாக நட்புச் செய்வது நட்பு அன்று; நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்புச் செய்வதே நட்பு ஆகும்.
பழமொழி :
Every ass loves it's Bray.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
இரண்டொழுக்க பண்புகள் :
1. பொறுமை கடலை விடப் பெரியது. எனவே நான் எப்போதும் பொறுமையை கடைப்பிடிப்பேன்.
2. சண்டை போடுவதால் பிறர் மனம் புண்படும். ஆதலால் என்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சண்டை போட மாட்டேன்.
பொன்மொழி :
விடாமுயற்சி என்பது 19 முறை தோற்றாலும், 20 வது முறை எழுந்து நிற்பது. ---ஜுலி ஆண்ட்ரூஸ்
பொது அறிவு :
1.உயிர் காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது எது ?
ரேடியம்
2. இரத்தத்தில் பி எச்(pH) மதிப்பு எவ்வளவு?
7.4
English words & meanings :
cleanliness-சுத்தம்,
purity-தூய்மை
வேளாண்மையும் வாழ்வும் :
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.
செப்டம்பர் 16 ஒமர் முக்தார் அவர்களின் நினைவுநாள்
ஒமர் முக்தார் (Omar Mukhtar, 1858 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். 1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத முக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.
கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்த நாள்
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),[3][4] கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். ரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[7] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, 98 வயதான கி.ரா. தனது இறுதி காலத்தில் புதுச்சேரியில் வாழ்ந்தார். 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.
சர்வதேச ஓசோன் படலப் பாதுகாப்பு நாள்
சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம். அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக ஐ.நா. அறிவித்துள்ளது. ஓசோன் படலம் சிதைந்து வருவதைத் தடுக்க வேண்டும் என்றும் 1970களில் விஞ்ஞானிகள் குரல் கொடுத்தனர். ஹாலந்தைச் சேர்ந்த பால் குருட்சன், ஓசோன் படலத்துக்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிந்தார். அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் குளோரோ புளூரோ கார்பன்கள் (Chloro fluro carbons - CFC), மிதைல் குளோரோபார்ம் போன்ற வேதிப்பொருள்கள் ஓசோன் படலத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது தெரிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உருவான சில கருவிகளே அந்த வேதிப்பொருட்களை வெளியிட்டன. கனடா நாட்டிலுள்ள மாண்ட்ரீல் நகரில் 1987-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி, ஓசோன் படலத்தை நாசம் செய்யும் வேதிப்பொருட்களுக்கு எதிரான ஐ.நா. மான்ட்ரீல் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. அந்த நாளே 1995-ம் ஆண்டு முதல் சர்வதேச ஓசோன் படலப் பாதுகாப்பு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நீதிக்கதை ஏமாற்றுபவன் ஏமாறுவான்
ஒரு ஊரில் செல்வர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எப்பொழுது சந்தைக்குப் போனாலும் ஏதாவது உணவுப் பொருள்களை வாங்கி வருவார். வீட்டுக்கு வந்து அமைதியாக உட்கார்ந்து அதனை ருசித்து சாப்பிடுவார்.
அவரிடம் ஒரு வேலைக்காரன் இருந்தான். அவன் செல்வர் எதைக் கொண்டு வந்தாலும் அதில் சிறிதளவாவது தன்னுடைய சாமர்த்தியத்தால் கேட்டு வாங்கி சாப்பிடுவான்.
வழக்கம் போல் ஒருநாள் சந்தைக்கு சென்று செல்வர் தான் உண்பதற்காக ஒரு டம்ளர் நிறைய கட்டித் தயிர் வாங்கி வந்தார். இம்முறை இந்த கட்டி தயிரில் சிறிது கூட வேலைக்காரனுக்கு கொடுக்கக் கூடாது முழுவதையுமே தானே சாப்பிட வேண்டும். அதற்கு ஒரே வழி அவனை ஏமாற்றுவதுதான் என்று எண்ணி அவர் வீட்டுக்குள் நுழைந்தார்.
அவரை வேலைக்காரன் பார்த்து விட்டான். அவன் செல்வரை நோக்கி, “ஐயா, டம்பளரில் என்ன இருக்கிறது?” என்று கேட்டான். உடனே செல்வர், “சுண்ணாம்பு வாங்கி வந்திருக்கிறேன். இதை சாப்பிட்டால் வயிறு எரிந்து, வயிற்றில் வலி வந்து உடனே உயிர் போய்விடும்.
எக்காரணம் கொண்டு இதைத் தொடாதே. போய் இன்று முழுவதும் தோட்டத்தை உழுதுவிட்டு வா” என்றார். வேலைக்காரனுக்கு செல்வர் தன்னை ஏமாற்றுகிறார் என்பது தெளிவாக புரிந்து விட்டது.
அவருக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டான். அது மட்டுமல்ல அந்த டம்பளரில் இருப்பது கட்டித் தயிர் தான் என்பதை அதன் வாசனையை வைத்து தெரிந்து கொண்டான்.
அவன் உடனே அந்த செல்வரை பார்த்து, “ஐயா, வெற்றிலை பாக்கு போட அந்த டம்ளரில் இருக்கும் சுண்ணாம்பிலிருந்து சிறிது எடுத்துக் கொடுங்க என்றான்.” உடனே செல்வர் வேலைக்காரனை பார்த்து, “நான் உன்னிடம் சொன்ன வேலையை முடித்துவிட்டு வா, அதிலிருந்து கொஞ்சம் தருகிறேன்” என்றார்.
மாடுகளை ஓட்டிக்கொண்டு சென்ற வேலைக்காரன் சிறிது நேரத்திற்குள் வீட்டிற்கு வந்தான். உடனே செல்வர் அவனிடம், “நான் சொன்ன வேலைகளை முடித்து விட்டாயா?” என்று கேட்டான்.
உடனே வேலைக்காரன் செல்வரை பார்த்து, “ஐயா, எந்த வேலையும் என்னால் செய்ய முடியவில்லை, ஒரு மாட்டை கட்டினால் மற்றொரு மாடு அறுத்துக் கொண்டு ஓடுகிறது. இதில் நான் எப்படி தோட்டத்தை உழுவது”என்றான்.
உடனே கோபப்பட்ட அந்த செல்வர், “வேலையை செய்ய சொன்னால் விளையாட்டு காட்டுகிறாயா” என்று கூறி அவன் முதுகில் ஓங்கி அறைந்தார். அவ்வளவுதான் அவன் செல்வரை பார்த்து, “ஐயா, இது நாள் வரை யாருமே என்னை அடித்ததில்லை. நீங்கள் என்னை அடித்து விட்டீர்கள் இனி நான் உயிர் வாழ்ந்து எந்த பயனும் இல்லை.
அந்த சுண்ணாம்பை குடித்து என் உயிரை விட்டுவிடுகிறேன்” என கூறிவிட்டு சமையல் அறைக்குள் ஓடினான். “டேய்.. குடிக்காதே என்று அந்த செல்வர் அவன் பின்னாலே கத்திக் கொண்டு வந்தார். அதற்குள் அந்த டம்பளரில் இருந்த கட்டித் தயிர் முழுவதையும் அந்த வேலைக்காரன் குடித்து விட்டான்.
வேலைக்காரனை ஏமாற்ற நினைத்து தானே முடிவில் ஏமாந்து விட்டேனே” என்று செல்வர் மனதில் கூறிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
நீதி: பிறரை ஏமாற்ற நினைப்பவன் முடிவில் தானே ஏமாந்து போவான். எனவே யாரையும் ஏமாற்ற கூடாது.
இன்றைய செய்திகள் 16.09.2024
* புகையிலையின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் யுஜிசி அறிவுறுத்தல்.
* நாட்டிலேயே வருவாய் ஈட்டுவதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 3-வது இடத்தை பெற்றுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
* தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 69,212 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு எட்டப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.682 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
* அடுத்த 48 மணி நேரத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
* சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக அதிகரிக்க சீனா முடிவு.
* டைமண்ட் லீக் இறுதி சுற்று: ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.
* ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி.
Today's Headlines
* UGC instructs all higher educational institutions to create awareness about the dangers of tobacco.
* According to the Railway Administration, the Chennai Central Railway Station has got the 3rd position in revenue generation in the country.
* 69,212 pending cases were resolved in the National People's Court (Lok Adalat) across Tamil Nadu. Accordingly, a compensation of around Rs.682 crore was ordered to be paid to the victims.
* Delhi Chief Minister Arvind Kejriwal has announced that he will resign as Chief Minister in the next 48 hours.
* China decides to gradually raise the legal retirement age.
* Diamond League finals: Neeraj Chopra wins silver in javelin.
* ISL Football: Bengaluru beat East Bengal and won the match
Prepared by
No comments:
Post a Comment