தற்போது பலரும் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். உண்மையில் இது நல்ல விஷயம். உடல், மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க மிக எளிதான வழிகளுள் ஒன்றாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளது.
அன்றாடம் 20 நிமிடம் சைக்கிள் ஓட்டுவதால் விளையும் நன்மைகள் இவை...
20 நிமிடம் சைக்கிள் ஓட்டினால்
ஏராள நன்மைகள்
சைக்கிள் ஓட்டுதல் என்பது கால்களை மட்டும் ஈடுபடுத்தும் உடற்பயிற்சி அல்ல. சைக்கிள் ஓட்டும் போது உடலின் ஒவ்வொரு பகுதியும் வேலை
செய்வதால், இது ஒரு முழுமையான உடற்பயிற்சி யாக உள்ளது. இது முழு உடலையும் உள்ளடக்கிய செயலாக இருப்பதால், கால்-கை-உடல்-கண் ஒருங்கிணைப்பு மேம்படும். சைக்கிள் ஓட்டுவது, தசை செயல்பாட்டை படிப் படியாக மேம்படுத்துகிறது. தீவிர உடற்பயிற்சி செய்யும்போது கூட சிறிதளவு சிரமப்பட நேரிடும். ஆனால் சைக்கிள் ஒட்டுவது, அதிக சிரமமின்றி கால் தசைகளை பலப்படுத்துகிறது.
இடுப்பு, முழங்கால் மூட்டுகளின் இரக்கத்துக்கு உதவுகிறது. மனநிலையை மேம்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாக சைக்கிள் ஓட்டுவது உள்ளது. காரணம், பெரும்பாலான மக்கள் சைக்கிள் ஓட்டுவதைரசிக்கிறார்கள். சைக்கிள் ஓட்டுதல் இதாத்தை சீரான முறையில் துடிக்க வைக்கிறது. கார்டியோவாஸ்குலர் பிட்னசை
மேம்படுத்த உதவுகிறது. வேலைக்குச் செல்ல சைக்கிள் ஓட்டுவது இதய
ஆரோக்கியத்தை 3 முதல் 7 சதவீதம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் மெடிக்கல் அசோசியேசன் 10 ஆயிரம் அரசு ஊழியர்களிடம் நடத்திய ஆய்வு முடிவின்படி, வாரத்துக்கு 20 மைல்கள் சைக்கிள் ஒட்டுவது கரோனரி இதய நோய் அபாயத்தை 50 சத வீதம் குறைக்கிறது. உடல் எடையை கட்டுப் படுத்தவும் சைக்கிள் ஓட்டுதல்
ஒரு சிறந்த வழியாகும். ஒரு மணிநேரத்துக்கு சைக்கிள்
ஓட்டுவதால், நம் உடலில் சுமார் 300 கலோரிகள் குறைகின்றன.
தினமும் 30 நிமிடம் சைக்கிள் ஓட்டினால், ஒரு வருடத்தில்
சுமார் 5 கிலோ அளவுக்கு தேவையில்லாத
கொழுப்பு கரையும். பொதுவாக எந்தவொரு வழக்கமான உடற்பயிற்சியும் மன அழுத்தத்தையும், மனச்சோர்வையும்
குறைக்கும். திறந்தவெளியில் சைக்கிள் ஓட்டுவது, இயற்கையோடு இணைந்து இருக்கவும், புதிய கவாசத்தை உணரவும் ஒரு சிறந்த வழியாகும். இது ஒருவரின் மனதை அன்றாட வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து மீட்டு, புத்துணர்ச்சி பெறச் செய்யும். எல்லாவற்றுக்கும் மேலாக, எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு மாறாக, சைக்கிளை பயன்படுத்தும்போது, நாம் சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்கிறோம்.
இது இயற்கைக்கு அல்ல, நமக்கு நாமேயும், நமது வருங்கால சந்ததிக்கும் செய்யும் சிறிய அளவிலாள நன்மை. சிறுதுளி பெருவெள்ளம் போல, அதிகம் பேர் சைக்கிள் ஓட்டும்போது, இந்த நன்மையின் அளவும் அதிகரிக்கும்.
ليست هناك تعليقات:
إرسال تعليق