அரசு தேர்வுகள் இயக்குனர் லதா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2024-25-ம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 பொதுத் தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்புக்கு 'எமிஸ்' தளத்தில் உள்ள மாணவர்களின் விவரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
எனவே, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், வருகிற 5-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 'எமிஸ்' தளம் மூலம் 10 மற்றும் பிளஸ்-1 மாணவர்களின் விவரம் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இந்த பணிகளில் தவறு நடந்தால் பள்ளி தலைமை ஆசிரியர்களே முழு பொறுப்பு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, தமிழ்மொழி அல்லாத மொழிவழி சிறுபான்மையின மாணவர்கள் கட்டாய தமிழ்மொழி பாடத்தேர்வு எழுதுவதில் இருந்து பள்ளிக்கல்வித்துறை விலக்களித்தது. தற்போது, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து தேர்வர்களும், பகுதி-1ல் தமிழ் மொழியை மட்டுமே மொழிப்பாடமாக தேர்வெழுத உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment