தமிழக பள்ளிகளில் வேலை நாள்கள் 210 ஆககுறைப்பு! - துளிர்கல்வி

Latest

Search This Site

الأربعاء، 11 سبتمبر 2024

தமிழக பள்ளிகளில் வேலை நாள்கள் 210 ஆககுறைப்பு!

தமிழக பள்ளிகளில் வேலை நாள்கள் குறைப்பு!



தமிழக பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் 10 வேலை நாள்கள் குறைப்பு.தமிழக பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில்(2024-25) 10 வேலை நாள்களை குறைத்து, பள்ளிக்கல்வித் துறை புதிய நாள்காட்டியை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலை நாள்கள், தோ்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. 

 அதன்படி, 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு செப். 20-ஆம் தேதி தொடங்கி செப்.27-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செப்.19 முதல் செப்.27-ஆம் தேதி வரை தோ்வுகள் நடைபெறவுள்ளன. தொடா்ந்து, செப்.28 முதல் அக்.2-ஆம் தேதி வரை தோ்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது.


பொதுவாக, ஒவ்வொரு கல்வியாண்டிலும் பள்ளிகளில் வேலை நாள்கள் சராசரியாக 210 ஆக இருக்கும். ஆனால் இந்த கல்வியாண்டில் 220 நாள்கள் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வேலை நாள்களை குறைக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வியாண்டில் 10 வேலை நாள்களை குறைத்து பள்ளிக்கல்வித் துறை புதிய நாள்காட்டியை வெளியிட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق