இந்திய ரெயில்வேயில் பணிபுரிய ஆட்களை தேர்வு செய்யும் ரெயில்வே தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி) சார்பில் 3,445 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வணிகம்-டிக்கெட் கிளார்க் பணிக்கு 2022 பேர், அக்கவுண்ட் கிளார்க் மற்றும் தட்டச்சர் பணிக்கு 361 பேர், ஜூனியர் கிளார்க் மற்றும் தட்டச்சர் பணிக்கு 990 பேர், ரெயில்வே கிளார்க் பணிக்கு 72 பேர் என மொத்தம் 3,445 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1-1-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 33 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். கணினி அடிப்படையிலான முதல் நிலை தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு/கணினி அடிப்படையிலான திறன் உள்ளிட்ட இரண்டாம் நிலை தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-10-2024. விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.
No comments:
Post a Comment