நபார்டு வங்கியில் மாதம் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் வேலை | விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, September 30, 2024

நபார்டு வங்கியில் மாதம் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் வேலை | விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2024

நபார்டு வங்கியில் மாதம் ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் வேலை 
நபார்டு வங்கியில் காலியாக உள்ள 108 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 35,000 சம்பளம் வழங்கப்படும். 

இப்பணியிடங்களுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்? வயது வரம்பு என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம். தேசிய விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி (NABARD) என சொல்லப்படும் நபார்டு வங்கி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் வங்கியாகும். 1982 ஆம் ஆண்டு இந்த வங்கி உருவாக்கப்பட்டது. 
விவசாயம் மற்றும் ஊரக தொழில் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இந்த வங்கியின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. நாடு முழுவதும் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன. வேளாண் சார்ந்த கடன்களை இந்த வங்கி அளித்து வருகிறது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்களை அவ்வப்போது தேர்வுகள் நடத்தி நிரப்பப்படுகின்றன. 

மத்திய அரசு வங்கி என்பதால், கை நிறைய சம்பளம், சலுகைகள் ஆகியவை இந்த வங்கி ஊழியர்களுக்கு கிடைக்கும். எனவே, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். தற்போது நபார்டு வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம். 

பணியிடங்கள் விவரம்: அலுவலக உதவியாளர் - 108 

கல்வித் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். 
வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்களும் 30 வயதுக்கு மிகாதவர்களும் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி இந்த வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படுகிறது. எஸ்.சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. 
சம்பளம் எவ்வளவு?: அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நபார்டு வங்கியின் கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க அவகாசம் தொடங்குகிறது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2024 ஆகும். தற்போது தேர்வு அறிவிப்பிற்கான ஷார்ட் நோட்டீஸ் மட்டுமே வெளியாகியுள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்துவிட்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு அறிவிப்பு வெளியான பிறகு இந்த இணையதளத்தில் https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26 தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment