மூன்றாம் பாலினத்தவரான நிவேதா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்காக விளக்க குறிப்பேட்டை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஜூன் மாதம் வெளியிட்டது.
அதில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு பிரிவினராக வகைப்படுத்தவில்லை. இதனால், இந்த படிப்பில் சேரும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. எனவே, 2024-2025ம் கல்வியாண்டுக்கான விளக்க குறிப்பேட்டை ரத்து செய்ய வேண்டும்.
நான் ஜூன் 26-ந்தேதி கொடுத்த விண்ணப்பத்தை பரிசிலிக்க, தேர்வுக்குழு தலைவருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘‘மனுதாரர் விண்ணப்பத்தை பரிசீலிக்கவேண்டும் என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு அரசு தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனால், 2 வாரத்துக்குள் மனுதாரர் விண்ணப்பத்தை பரிசீலிக்கவேண்டும். மனுதாரர் 3-ம் பாலினத்தவர் எனக்கு கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரிக்கக்கூடாது'' என்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment