குரூப் 4 தோ்வு: இறுதி விடைகள் வெளியீடு! - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, September 17, 2024

குரூப் 4 தோ்வு: இறுதி விடைகள் வெளியீடு!

குரூப் 4 தோ்வு: இறுதி விடைகள் வெளியீடு 

📌குரூப் 4 தோ்வுக்கான இறுதி விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது.குரூப் 4 தோ்வுக்கான இறுதி விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தோ்வு மையங்களில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட குரூப் 4 தோ்வை கடந்த ஜூன் 9-ஆம் தேதி 15.8 லட்சம் போ் எழுதினா். 

📌கிராம நிா்வாக அலுவலா் 108, இளநிலை உதவியாளா் 2,604, தட்டச்சா் 1,705, சுருக்கெழுத்து தட்டச்சா் 445 உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்தத் தோ்வில், தமிழ்ப் பகுதியில் இருந்து 100 கேள்விகளும், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. தோ்வுக்கான தற்காலிக விடைகள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க தோ்வாணையம் கூறியிருந்தது. 

📌தோ்வுக்கான தற்காலிக விடைகள் பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க தோ்வாணையம் கூறியிருந்தது. இதையடுத்து இறுதி விடைப் பட்டியலை www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது



No comments:

Post a Comment