குரூப்-4 பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்படுகிறதா? - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 20, 2024

குரூப்-4 பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்படுகிறதா?

குரூப்-4 பணியிடங்கள் மேலும் அதிகரிக்கப்படுகிறதா? அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு 

அரசுத் துறைகளில் காலியாகும் இடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (குரூப்-4) அறிவிப்புகளை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. 
இதில் குரூப்-4 பணியிடங்களுக்கு அதிக கிராக்கி இருக்கிறது. காரணம் அந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி என்பதால், அதிக பேர் விண்ணப்பிப்பார்கள். அந்த வகையில் நடப்பாண்டில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பதவிகளில் 6,244 பணியிடங்களுக்கு முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
இதற்கு சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, தேர்வை 15 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதி இருக்கின்றனர். தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன. 
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 6 ஆயிரத்து 244 பணியிடங்களுடன் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பை வெளியிட்டது. 

அதன்படி, தற்போது 6 ஆயிரத்து 724 பணியிடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் மேலும் இந்த பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் மற்றும் 2-வது வாரத்தில் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment