6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!! - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 13, 2024

6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!!

6-9 வகுப்புகளுக்கு கற்றல் விளைவு / திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!!

1 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைப்பு -1இல் உள்ளவாறு 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் விளைவு / திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை (Learning Outcome / Competency Based Test) நடத்த வேண்டும். 

2. இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டுப் புலம் வழியாக https:/exam.tnschools.gov.in என்னும் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். 

3. இணைப்பு - 1 இல் குறிப்பிட்டுள்ளவாறு, தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக பிற்பகல் 2 மணி முதல் தேர்விற்கு முன்பாக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வினாத்தாள்களைப் பதிவிறக்கம் பணியானது தலைமை ஆசிரியர் முன்னிலையில் செய்திருக்க வேண்டும். 

4. 14417 காண் என்ற வினாத்தாள்களைப் பதிவிறக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு கட்டணமில்லாத் தொலைபேசிச் சேவையைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 

5. தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப்பொறியைப் பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும். முதல் நாளில் பிரதிகள் எடுக்கும் போது, மாணவர்களின் சரியான எண்ணிக்கைக்கு உரியதை மட்டும் எடுக்க வேண்டும். 

உடனடியாக இரு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் உறையில் இட்டு சீலிட வேண்டும். வகுப்பறையில் தேர்வு நாளன்று, பிரிக்கும் வகையில் வகுப்பு வாரியாக தனித்தனி உறையிட வேண்டும்.


No comments:

Post a Comment