மாநகராட்சி சுகாதார மையங்களில் வேலை வாய்ப்பு | சம்பளம் :60 ஆயிரம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, September 5, 2024

மாநகராட்சி சுகாதார மையங்களில் வேலை வாய்ப்பு | சம்பளம் :60 ஆயிரம்

மாநகராட்சி சுகாதார மையங்களில் வேலை வாய்ப்பு | சம்பளம் :60 ஆயிரம்

 சென்னை: சென்னை மாநகர சுகாதார திட்டத்தின் கீழ் நகர்புற நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், நர்சுகள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து விடவும். 

சென்னை பெருநகர சுகாதார மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர், செவிலியர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மெடிக்கல் ஆபிசர், ஸ்டாப் நர்ஸ், பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாள்... எனவே தகுதியும் ஆர்வமும் இருந்து விண்ணப்பிக்காத தேர்வர்கள் இன்றே விண்ணப்பித்து விடுங்கள். எப்படி விண்ணப்பிப்பது கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்..

 பணியிடங்கள் விவரம்:

 மெடிக்கல் ஆபிசர் - 30 பணியிடங்கள் 

ஸ்டாப் நர்ஸ் - 32 

பல்நோக்கு சுகாதார பணியாளர் - 12 

உதவி அலுவலர் - 66 என மொத்தம் 140 

பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 

கல்வி தகுதி: 

👉மெடிக்கல் ஆபிசர் பணியிடத்திற்கு எம்.பி.பி.எஸ் முடித்து இருக்க வேண்டும்.

 👉ஸ்டாப் நர்ஸ் பணிக்கு பி.எஸ்.சி நர்சிங் / டிப்ளமோ நர்சிங் முடித்து இருக்க வேண்டும். 

👉நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்வது அவசியம். 

👉பல்நோக்கு சுதாரா பணியாளர் பணிக்கு அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுகாதார ஆய்வாளர் பணி மற்றும் சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்புக்கான இரண்டு ஆண்டு டிப்ளமோ முடித்து இருப்பது அவசியம். 

👉உதவி அலுவலர் பணிக்கு 8-ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும். 

சம்பளம் எவ்வளவு: 

👉மெடிக்கல் ஆபிசர் - 60 ஆயிரம் 

👉சம்பளம் ஸ்டாப் நர்ஸ் - 18 ஆயிரம் 

👉சம்பளம் பல்நோக்கு சுகாதார பணியாளர் - 14 ஆயிரம் 

👉சம்பளம் உதவி அலுவலர் - 8,500 சம்பளம் 

இந்த மூன்று பணியிடங்களுக்கும் 50 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.

 தேர்வு முறை: 

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும். ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தபால் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கவேண்டிய முகவரி: 

Office of the Member Secretary, 
CCUHM / City Health Officer, 
Public Health Department, 
3rd Floor, Amma Maligai Greater Chennai Corporation, 
Ripon Buildings, Chennai - 3" 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.09.2024 ஆகும். 

வயது வரம்பை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். 

No comments:

Post a Comment