வெளி இடங்களுக்கு செல்லாமல் இருந்த இடத்திலேயே உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற சூழலை பலரும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். அதிலும் எளிமையான பயிற்சியை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு ‘8’ நடைப்பயிற்சி சிறந்த தேர்வாக அமையும். 8 என்ற எண் வடிவத்தை வரைந்து விட்டு நடக்க தொடங்கினால் போதும். அது நடப்பதற்கு சாதாரணமாக தோன்றலாம்.
📌வடக்கு-தெற்கு திசையை நோக்கியவாறு 8 வடிவில் கோடுகளை வரைந்து கொள்ள வேண்டும். பின்பு வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி நடக்க தொடங்க வேண்டும். பின்பு தெற்கில் இருந்து வடக்கி நோக்கி நடைப்பயிற்சியை தொடர வேண்டும். இப்படி கடிகார திசையிலும், அதற்கு எதிரெதிர் திசையிலும் தலா 15 நிமிடங்களுக்கு இந்த பயிற்சியை மேற்கொண்டு வரலாம்.
📌இந்த பயிற்சியின்போது 8 வடிவ கோட்டின் மீது மட்டுமே கவனம் பதிந்திருக்க வேண்டும்.
கூடுமானவரை செருப்பு, ஷூ அணியாமல் வெறுங்காலில் நடப்பதற்கு முயற்சி செய்யலாம். அப்படி வெறுங்காலில் நடப்பது கூடுதல் நன்மையை பெற்றுத்தரும்.
📌நமது உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில்தான் நமது உள் உறுப்புகளின் முக்கிய இணைப்பு புள்ளிகள் அமைந்துள்ளன. நடக்கும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக உள் உறுப்புகள் அனைத்தும் துரிதமாக செயல்பட தொடங்கும். அது சார்ந்த ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால் அதில் இருந்து நிவாரணம் பெற உதவிடும்.
📌8 வடிவத்தில் நடக்கும்போது இடுப்பு, வயிறு போன்ற உடல் பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அனைத்து உறுப்புகளும் செயல்பட தூண்டப்படும்.
📌30 நிமிடம் மேற்கொள்ளும் இந்த பயிற்சி சுவாசத்திற்கும் பலம் சேர்க்கும். மூக்கடைப்பு இருந்தால் அதில் இருந்து விடுபடவும் முடியும். இரு நாசித்துவாரங்களும் சுதந்திரமாக சுவாசிப்பதற்கான சூழல் உருவாகும்.
📌நுரையீரல் மற்றும் சைனஸ் குழியில் சளி சேர்ந்திருந்தால் அது கரைவதற்கான வாய்ப்பும் ஏற்படும்.
📌தினமும் இரண்டு முறை அரை மணி நேரம் இந்த பயிற்சி செய்தால் பாத வெடிப்புகள், முழங்கால் வலிகள் உள்ளிட்டவையும் குணமாகுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
📌இந்த பயிற்சியின்போது ஆழ்ந்து சுவாசிப்பதன் காரணமாக ஐந்து கிலோகிராம் அளவுக்கு ஆக்சிஜன் உள்ளிழுக்கப்படுவதால், நுரையீரலில் சேர்ந்திருக்கும் சளியும் வெளியேறும். ஆக்சிஜன் அதிகமாக உட்கொள்ளப்படுவதால் உடலுக்கும் ஆற்றல் கிடைக்கும்.
📌தலைவலி, செரிமான பிரச்சினைகள், தைராய்டு, உடல் பருமன் மற்றும் முழங்கால் வலிகள், முடக்கு வாதம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவை கட்டுப்படும்.
📌இந்த பயிற்சியை தொடர்வது கேட்கும் சக்தி மேம்படும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
📌ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்கும் உதவிடும்.
📌கண் பார்வையை மேம்படுத்தும். கண் தொடர்பான பிரச்சினைகள் குறைவதற்கும் வித்திடும். வரையப்பட்டிருக்கும் கோடுகளை கூர்ந்து கவனித்தபடி செல்வதால், கருவிழிகள் அங்கும் இங்கும் சுழன்று, கண்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
📌இந்த பயிற்சி முதுமையை தள்ளிப்போடவும் செய்துவிடும். இளமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட வைக்கும்.
No comments:
Post a Comment