ரெயில்வேயில் 8,113 பணி இடங்கள் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 13-10-2024 - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, September 21, 2024

ரெயில்வேயில் 8,113 பணி இடங்கள் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 13-10-2024

இந்திய ரெயில்வே துறைக்கு ஆட்களை தேர்வு செய்யும் ரெயில்வே தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி) மூலம் 8,113 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
முதன்மை வணிகம் - டிக்கெட் மேற்பார்வையாளர் (1736), ஸ்டேஷன் மாஸ்டர் (994), சரக்கு ரெயில் மேலாளர் மேற்பார்வையாளர் (3,144), இளநிலை கணக்கு உதவியாளர் - தட்டச்சர் (1507), சீனியர் கிளார்க் - தட்டச்சர் (732) போன்ற பதவிகளுக்கு இந்த ஆட்தேர்வு நடைபெற உள்ளது. 




இந்த பதவிகளுக்கு கல்வித் தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இளநிலை கணக்கு உதவியாளர் - தட்டச்சர், சீனியர் கிளார்க் - தட்டச்சர் பதவிகளுக்கு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்வதற்கு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். 1-1-2025 அன்றைய தேதிப்படி 18 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 



அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். கணினி அடிப்படையிலான முதல் நிலை தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு/கணினி அடிப்படையிலான திறன் உள்ளிட்ட இரண்டாம் நிலை தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 13-10-2024 வரை ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப நடைமுறை சம்பந்தப்பட்ட விரிவான விவரங்களை https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment