9 விதமான பயனுள்ள சமையல் குறிப்புகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, September 8, 2024

9 விதமான பயனுள்ள சமையல் குறிப்புகள்

01.கார அடைக்கு பச்சரிசி சேர்ப்பது போல, கோதுமை ரவையை மற்ற பருப்புகளுடன் ஊற வைத்து அரைத்து வார்த்தால், அடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும். 

02.கேசரி செய்யும்போது நீரின் அளவைக்குறைத்து பால் கலந்து செய்தால், நல்ல மணத்துடன் இருக்கும். அதில் பேரீச்சை, அன்னாசி பழங்களையும் வெட்டிப்போட்டு பழக்கேசரி செய்தால் சுவையும், சத்தும் கூடும். 

03.தேநீர் டிகாஷனில் எலுமிச்சை சாறு, பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து குடித்தால் மணமாக இருக்கும். வாயுத்தொல்லை நீங்கும். 
04.நாள்பட்ட உளுந்தில் இட்லி, வடைக்கு அரைக்கும்போது மாவு பொங்கி வராது. பிரிட்ஜில் உளுந்தை வைத்து தேவைப்பட்டபோது பயன்படுத்தினால், உளுந்து நன்றாக பொங்கிவரும். 

05.புதுப்புளி விறைப்பாக இருக்கும். உருட்டி கல் உப்பு ஜாடியில் போட்டு வைத்தால், மிருதுவாகிவிடும், புளியை கரைப்பது எளிதாக இருக்கும். 

06.கொழுப்பு பதார்த்தங்களை சாப்பிட்ட பின்பு வெங்காயம் சாப்பிட்டால் கொழுப்பு உடலில் தங்காது. 
07.அகத்திக்கீரைக்கு தண்ணீர் அதிகம் ஊற்றி, பச்சை நிறம் மாற சமைக்க வேண்டும். முருங்கைக்கீரையை நிறம் மாறும் முன்பு எடுத்துவிட வேண்டும். 

08.சீயக்காய் அரைக்கும்போது மற்ற பொருட்களுடன் வேப்பிலையையும் காயவைத்து அரைத்தால் பேன் வராது. 

09.பாலை லேசாக சூடு படுத்தி அரை ஸ்பூன் சர்க்கரை கரைத்து உறை ஊற்றினால் தயிர் கெட்டியாக கிடைக்கும். ருசியும் மேம்படும். 

 -வித்யா வாசன், சென்னை-78.

No comments:

Post a Comment