வயது முதிர்தலை தடுக்கும் பலாப்பழம்:-
முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் காணப்படுகின்றது.
பலாப்பழத்தின் மேற்புறம் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும், கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும்.
இப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்கவல்லது.
அதாவது வயது முதிர்தலை தள்ளிப் போடுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.
கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.
பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது.
உடல் நல பலன்கள் :-
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.
அதிக அளவில் பலாப்பழம் உண்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. பழுக்காத பழச்சுளையை அப்படியே உண்பது நல்லதல்ல. அதே போல சமைக்காத கொட்டைகள் ட்ரிப்சின் என்ற புரதச்சிதைவு நொதியை பாதிப்பதால் செரிமாணத்தை பாதிக்ககூடும். பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன.
No comments:
Post a Comment