டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க முதியோருக்கு வீடு தேடி சேவை
தபால்துறை முடிவு
ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெற டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பது அவசியம்.
அதற்காக நவம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதிவரை நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தபால் அலுவலகங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் முகாம் நடத்த தபால்துறை முடிவு செய்துள்ளது. இதில், ஓய்வூதியதாரர்கள் பங்கேற்று, ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் தங்களது முக அடையாளத்தை உறுதிசெய்து டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
மேலும், முதியவர்களுக்கு வீடு தேடிச்சென்று டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழுக்கான சேவையை அளிக்க தபால்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பேனர்கள், சமூக வலைத்தளங்கள், குறுஞ்செய்திகள் மூலம் பிரசாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق