அரசு உதவி வழக்கறிஞர் பணி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு. - துளிர்கல்வி

Latest

Search This Site

Monday, September 16, 2024

அரசு உதவி வழக்கறிஞர் பணி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு.

அரசு உதவி வழக்கறிஞர் பணி.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய அறிவிப்பு. 

51 அரசு உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இளங்கலை சட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுமுறை, விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட விவரங்களை இங்கே விவரமாக பார்க்கலாம். தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. குரூப் 1, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப உரிய அறிவிப்புகள் வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தி வருகிறது. தமிழகத்தில் அரசு வேலைக்கு காத்திருக்கும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள், டிஎன்பிஎஸ்சி நடத்தும் இந்த தேர்வுகளுக்காக விடா முயற்சியுடன் படித்து அரசு பணி கனவை நனவாக்க ஆர்வமுடன் தேர்வு எழுதி வருகிறார்கள். டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் கால அட்டவணை வெளியிட்டு அதற்கேற்ப தேர்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம். பணியிடங்கள் விவரம்: அரசு உதவி வழக்கறிஞர் பணி Assistant Public Prosecutor, Grade-II)-51 பணியிடங்கள். கல்வி தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை இளங்கலை சட்டப்படிப்பு (BL) முடித்து இருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்து இருப்பதோடு கிரிமினல் நீதிமன்றங்களில் கட்டாயம் வழக்கு நடத்தியவராக இருத்தல் வேண்டும். தமிழில் போதிய அறிவு இருக்க வேண்டும். 


வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது உச்ச வரம்பை பொறுத்தவரை 36 க்கு மிகாமல் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி, எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது உச்ச வரம்பு கிடையாது. சம்பளத்தை பொறுத்தவரை அரசு உதவி வழக்கறிஞர் கிரேட் II -லெவல் படி வழங்கப்படும். இது குறித்த விவரங்களை தேர்வர்கள் தேர்வு அறிவிப்பில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம்: ஆர்வமும் போதுமான கல்வி தகுதியும் இருப்பவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணமாக முதன்மை தேர்வுக்கு ரூ.100-ம், மெயின் தேர்வுக்கு ரூ.200-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் ஒருமுறைபதிவு (One Time Registration) இல்லாதவர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டியிருக்கும். எஸ்சி/எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள்: 13.09.2024 விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.10.2024 விண்ணப்பங்களை திருத்துவதற்கான அவகாசம்: 16.10.2024 -12.01 A.M முதல் 18.10.2024- 11.59 P.M முதன்மை தேர்வு நடைபெறும் நாள்: 14.12.2024-நேரம்: 2.30 - 5.30, மெயின் தேர்வு நடைபெறும் தேதி பிறகு அறிவிக்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை படித்து படித்து தெரிந்து கொள்ளவும். தேர்வு அறிவிப்பினை படிக்க 

No comments:

Post a Comment